BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தனமல்விலவில் கோர விபத்து: லொறி - முச்சக்கர வண்டி மோதியதில் வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

தனமல்விலவில் கோர விபத்து: லொறி - முச்சக்கர வண்டி மோதியதில் வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

தனமல்வில - வெல்லவாய பிரதான வீதியில், குடாஓய நகருக்கு அருகில் நேற்றுமுன்தினம் (28.03.2026) இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். வெல்லவாயவிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, எதிர்த் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் பலமாக மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுவன் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

காயமடைந்த சிறுவன் உடனடியாக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதி குடாஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்கான மேலதிக காரணங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"