BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சுட்டெரிக்கும் வெப்பம் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

சுட்டெரிக்கும் வெப்பம் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (26) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிக வெப்பம் உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த உணரப்படும் வெப்பநிலை, சாதாரணமாக பதிவாகும் வெப்பத்தை விட உடல் அனுபவிக்கும் வெப்பத்தை குறிக்கின்றது.

இந்த நிலையில், நீண்ட நேரம் வெயிலில் இருப்பது அல்லது வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவது உடல் சோர்வை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்தகைய சூழலில் இருப்பது தசைப்பிடிப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்.

எனவே பொதுமக்கள் போதியளவு தண்ணீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றும், தேவையற்ற கடினமான வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"