BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

ஏப்ரல் வரை நீடிக்கும் கடும் வெப்பம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

ஏப்ரல் வரை நீடிக்கும் கடும் வெப்பம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தின் விளைவாக, இலங்கையில் வழமையை விடவும் மிக அதிக வெப்பநிலை பதிவாகி வருகின்றது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ், சர்வதேச ரீதியில் சராசரி வெப்பநிலை 1 முதல் 1.5°C வரை அதிகரித்துள்ளதே இந்த மாற்றத்திற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வரட்சியான மற்றும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


குறிப்பாக சப்ரகமுவ, வடமேல், மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களுடன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் இந்த வெப்பநிலை அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்துமாறும், நண்பகல் வேளைகளில் நேரடி வெயிலில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"