BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எரிசக்தி நெருக்கடி: புதன்கிழமை விசேட விடுமுறை நடைமுறை தொடர்ச்சி

எரிசக்தி நெருக்கடி: புதன்கிழமை விசேட விடுமுறை நடைமுறை தொடர்ச்சி

நாட்டில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிவித்துள்ள வாராந்திர விசேட விடுமுறை இன்றும் (25) அமலில் உள்ளது.

எரிசக்தி மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, இனிமேல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இவ்விடுமுறை நடைமுறையில் இருந்தாலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரம், நீர் வழங்கல், போக்குவரத்து, துறைமுக மற்றும் விமான சேவைகள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் காவல்துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறை நாட்களிலும் அவசியமான பணிகளை தடையின்றி மேற்கொள்ள தேவையான அதிகாரங்கள் அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அரச துறைகளில் எரிசக்தி நுகர்வை குறைக்கும் தற்காலிக நடவடிக்கையாக இந்த வாராந்திர விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"