BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

மத்திய கிழக்கில் மோதல்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை

மத்திய கிழக்கில் மோதல்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து அவர் நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க உள்ளார்.

கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி உரை நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பின் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற வாய்ப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி 36 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"