BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பேலியகொடவில் மசாஜ் நிலையங்களுக்குப் பின்னால் இயங்கிய விபச்சார விடுதிகள்: பேர் கைது!

பேலியகொடவில் மசாஜ் நிலையங்களுக்குப் பின்னால் இயங்கிய விபச்சார விடுதிகள்: பேர் கைது!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரண சந்தை மற்றும் பேலியகொட பகுதிகளில், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, இரண்டு விடுதிகள் முற்றுகையிடப்பட்டன. இந்த நடவடிக்கையில், விடுதிகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் களனி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.


மேலும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட 8 பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் லுணுகலை, மொரட்டுவ, தல்பே, முல்லெடியாவ, தெஹிகல்பிட்டிய, நாமல்கமுவ மற்றும் கல்நேவ ஆகிய வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இவ்வாறான போலி மசாஜ் நிலையங்கள் அதிகரித்து வரும் நிலையில், பேலியகொட பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"