BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யானை மாதிரி ரவுண்டா முகம் இருக்கும் உடல் எடை குறைத்தது குறித்து குஷ்பூ பகிர்வு

யானை மாதிரி ரவுண்டா முகம் இருக்கும் உடல் எடை குறைத்தது குறித்து குஷ்பூ பகிர்வு

90களில் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் Khushbu Sundar. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இவருக்காக ரசிகர்கள் கோவில் கூட கட்டிய சம்பவம் அந்நேரத்தில் பெரும் பேசுபொருளாக அமைந்தது.

இந்நிலையில், முன்பு Chubby தோற்றத்துடன் இருந்த நடிகை குஷ்பூ, சமீப காலத்தில் தன்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்து புதிய தோற்றத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய உடல் எடையை எப்படி குறைத்தார் என்பது குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், Annaatthe திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் தன்னுடைய உடல் எடை சுமார் 98 கிலோ இருந்ததாக தெரிவித்துள்ளார். “அப்போது கொஞ்சம் கூட அதிகரித்திருந்தால் 100 கிலோவாகி இருக்கும்” என்றும் அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 55 வயதாக இருந்தாலும் தமக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றும், ஆரோக்கியமாக இருப்பதே தன்னுடைய முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “என் முகம் யானை மாதிரி ரவுண்டாக இருக்கும். கடைசியில் பிபி வராமல் இருக்கவும், முட்டி வலி குறையவும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மருத்தவர்கள் கூறினர். அதனால் தான் கோவிட் காலத்தில் இருந்து உடல் எடையை குறைக்கும் முயற்சியை ஆரம்பித்தேன்” என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆரோக்கியத்தை முன்னிட்டு வாழ்க்கை முறையில் மாற்றம் செய்து உடல் எடையை குறைத்ததாக அவர் கூறியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"