BREAKING
அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள் அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

இன்றைய (06.03.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள், சபாநாயகர் Jagath Wickramaratne தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை 09.30 மணிக்கு தொடங்கியுள்ளதுடன், அவை மாலை 05.30 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 09.30 மணி முதல் 10.00 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரை உள்ள விதிகளின் அடிப்படையில் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காலை 11.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின், மாலை 05.00 மணி முதல் 05.30 மணி வரை அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் மற்றும் ஒத்திவைப்பு வேளையின் போது அரசாங்கத்தின் பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"