BREAKING
அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள் அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள்

இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர் கப்பல் தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு

இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர் கப்பல் தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு

இலங்கையின் காலி கடற்பரப்பில் ஈரானின் ஐரிஸ் தேனா என்ற போர் கப்பல் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் 87 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதல்முறையாக எதிரி கப்பலை நீர்மூழ்கி கப்பலின் குண்டு மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – இஸ்ரேல் மோதல் இந்திய பெருங்கடல் பகுதிவரை விரிவடைந்துள்ளதாக சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனுடன் தொடர்புபடுத்தி கடந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போரின் போது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பயன்படுத்திய கடல்சார் தொழில்நுட்பங்களும் மீண்டும் பேசப்படுகின்றன.

அவர்களிடம் முழுமையான நீர்மூழ்கி கப்பல்கள் இல்லாவிட்டாலும் அரை நீர்மூழ்கி வகை படகுகள் மற்றும் சிறிய நீருக்கடிக் கலங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட கட்டுமானங்கள், நீருக்கடியில் இயங்கக்கூடிய கலங்களை உருவாக்கும் முயற்சிகள் நடந்ததை உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த காலத்தில் இத்தகைய தொழில்நுட்பங்கள் ஆயுதங்களை ரகசியமாக கடத்துதல் மற்றும் தாக்குதல்களை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையிடம் அப்போது மேம்பட்ட நீர்மூழ்கி கண்டறிதல் தொழில்நுட்பங்கள் குறைவாக இருந்ததால் இந்த முயற்சிகள் ஒரு அச்சுறுத்தலாகவே கருதப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் தற்போது உலகளவில் நடைபெறும் போர்களில் மனிதர்கள் இல்லாத நீர்மூழ்கி கருவிகள், டிரோன் தொழில்நுட்பங்கள் மற்றும் கடல்சார் ஏவுகணைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் இந்திய பெருங்கடல் பாதுகாப்பு சூழலிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"