BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மீண்டும் திரையரங்குகளில் கில்லி ப்ரீ புக்கிங்கில் லட்சம் வசூல்

மீண்டும் திரையரங்குகளில் கில்லி ப்ரீ புக்கிங்கில் லட்சம் வசூல்

இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கில்லி. விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

தெலுங்கில் வெளியான ஒக்கடு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான கில்லி, பல மாற்றங்களுடன் தனித்துவமான திரைக்கதையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதிரடி, காதல், நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் கலந்த இப்படம், விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போது உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. இதுவரை ரீ-ரிலீஸான படங்களில் அதிக வசூல் செய்த படமாக கில்லி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வருகிற 20ஆம் தேதி மீண்டும் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரீ புக்கிங் சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இதுவரை உலகளவில் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பால், மீண்டும் ஒரு முறை திரையரங்குகளில் கில்லி கொண்டாட்டம் காத்திருக்கிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"