BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

கேரளாவில் ஹொட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்மருமகன் உயிரிழப்பு உணவு பாதுகாப்பு துறை விசாரணை

கேரளாவில் ஹொட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்மருமகன் உயிரிழப்பு உணவு பாதுகாப்பு துறை விசாரணை

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டம், நிலமேல் (Nilamel) பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஷாஜி மற்றும் அவரது மாமியார் 58 வயதுடைய ரஷீதா பீவி ஆகியோர் ஹொட்டலில் உணவருந்தியதையடுத்து ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு, ஷாஜி தனது மனைவி சஜினா, மாமியார் மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் விழிஞ்ஞம் பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றுள்ளனர். கார் ஓட்டுநர் உட்பட மொத்தம் ஆறு பேர் அங்கு மீன் குழம்பு உணவாக எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவருந்தி வீடு திரும்பும் வழியில் ஷாஜி, அவரது மனைவி மற்றும் மாமியாருக்கு திடீரென மயக்கம் மற்றும் வாந்தி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் பாரிப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், ஷாஜி மற்றும் அவரது மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சஜினா மேலதிக சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கெட்டுப்போன மீன் குழம்பை உணவாக எடுத்துக்கொண்டதன் காரணமாகவே இந்த துயர சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினரும், பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"