BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

"வேலைக்காக காத்திருந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்!" - சாம் ரைய்மியின் அதிரடி சர்வைவல் த்ரில்லர்: ராச்சல் மெக்டம்ஸின் மிரட்டலான மாற்றம்.

"வேலைக்காக காத்திருந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்!" - சாம் ரைய்மியின் அதிரடி சர்வைவல் த்ரில்லர்: ராச்சல் மெக்டம்ஸின் மிரட்டலான மாற்றம்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பதவி உயர்வுக்காகக் (Promotion) காத்திருக்கும் உழைப்பாளிப் பெண் ராச்சல் மெக்டம்ஸ். ஆனால், நிறுவனத்தின் புதிய வாரிசான எம்.டி (MD), ராச்சலின் திறமையை மதிக்காமல் அந்தப் பதவியை வேறு ஒருவருக்கு வழங்குகிறார். கடும் வாக்குவாதத்திற்குப் பின், தனது திறமையை நிரூபிக்க ஒரு வெளிநாட்டுப் பயணத்தை ராச்சல் மேற்கொள்கிறார்.

அவர் பயணிக்கும் விமானம் எதிர்பாராத விதமாக ஒரு ஆள் நடமாட்டமற்ற தீவில் விபத்துக்குள்ளாகி (Crash) விழுகிறது. அங்கிருந்து அவர் எப்படித் தப்பித்தார்? தன்னை ஏளனமாகப் பார்த்த தன் மேலதிகாரியுடன் அந்தத் தீவில் அவர் நடத்தும் 'உயிர்வாழும் போராட்டமே' மீதிக்கதை.


நடிப்பு மற்றும் இயக்கம்:

ராச்சல் மெக்டம்ஸ்: படத்தின் முதல் பாதியில் ஒரு அமைதியான, பொறுமையான அதிகாரியாக வரும் அவர், இரண்டாம் பாதியில் அந்தத் தீவில் சிக்கிய பின் காட்டும் 'டிரான்ஸ்பர்மேஷன்' (Transformation) வெறித்தனம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் எடுக்கும் ஆக்ரோஷமான முடிவுகள் மிரட்டல்.

டிலான் (Dylan): ராச்சலுக்கு ஆரம்பத்தில் ஆட்டிடியூட் காட்டும் கதாபாத்திரத்தில் டிலான் கச்சிதம். தீவில் சிக்கிய பின் அவர் படும் பாடும், ராச்சலின் ஆதிக்கம் அவர் மீது திரும்புவதும் ரசிகர்களுக்கு (குறிப்பாகப் பெண்ணியச் சிந்தனை கொண்டவர்களுக்கு) பெரும் விருந்து.

சாம் ரைய்மி: தனது வழக்கமான பாணியில் வன்முறை மற்றும் த்ரில் கலந்த காட்சிகளைக் கையாண்டுள்ளார். ஒரு சாதாரண அலுவலகக் கதையை எப்படி ஒரு ரத்தமும் சதையுமான த்ரில்லராக மாற்றுவது என்பதில் அவர் மீண்டும் ஜொலிக்கிறார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"