BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் கணவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் கணவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (04) அதிகாலை மூன்று பேர் உள்நுழைந்து பயங்கரமான வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த வீட்டில் அந்த நேரத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் மட்டுமே இருந்த நிலையில், கணவரை இலக்காகக் கொண்டு சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின்போது தம்பதிகள் கூச்சலிட்டபோதும், அச்சம் காரணமாக அயலவர்கள் எவரும் உதவிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முயன்ற வேளையில் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும், பொலிஸார் மதிய நேரத்திலேயே விசாரணைகளை ஆரம்பித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"