BREAKING
ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது! நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது! நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

அதிகரிக்கும் விலைகள்; இலங்கை மத்திய வங்கி வட்டி வீதம் உயர்வு!

அதிகரிக்கும் விலைகள்; இலங்கை மத்திய வங்கி வட்டி வீதம் உயர்வு!

  இலங்கை மத்திய வங்கி நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்து 9 சதவீதமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் மாறிவரும் நிலைமைகள் மற்றும் எதிர்காலப் போக்குகளைக் கவனமாகப் பரிசீலித்த பின்னரே நாணயச் சபை இத்தீர்மானத்திற்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்துள்ளன.

உயர்வடைந்த உலகளாவிய எரிசக்தி விலைகள் மற்றும் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள் என்பன உள்நாட்டில் பணவீக்க அழுத்தங்களைத் தொடர்ந்து தூண்டி வருவதால், 2026 ஒக்டோபர் மாதத்தில் ஆண்டிற்கு ஆண்டு ஒப்பீட்டளவில் பணவீக்கம் 8.3% ஆக அதிகரித்துள்ளது.

குறுகிய காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருக்கும் என்ற எதிர்வுகூறலைக் கருத்திற்கொண்டு, பணவீக்க எதிர்பார்ப்புகள் இலக்கிலிருந்து விலகிச் செல்லும் அபாயத்தைக் குறைப்பதற்கு நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்குவது அவசியம் என சபை கருதியது.

இவ்வாறான கொள்கை இறுக்கமானது, உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் சபை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"