BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

அஜித்தின் கார் ரேஸ் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரிக்கும் அதிருப்தி

அஜித்தின் கார் ரேஸ் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரிக்கும் அதிருப்தி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் நடிகர் அஜித், நடிப்பில் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆன போதிலும், அதன் பின்னர் அஜித் தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடிக்காமல் கார் ரேஸ் மீதான ஆர்வத்தில் அதிகமாக ஈடுபட்டு வருவது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

திரைப்படங்களில் அஜித்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள், அவர் படங்களை புறக்கணித்து கார் ரேஸ் நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், அஜித் ஓட்டும் கார் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்து வருவதும், சில சமயங்களில் விபத்துகளுக்கும் உள்ளாகி வருவதும் ரசிகர்களை மேலும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக, ரேஸ் நடைபெறும் போது அஜித்தின் கார் கட்டுப்பாட்டை இழந்து ட்ராக் விட்டு வெளியே சென்ற சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. இத்தகைய சம்பவங்கள் அவரது பாதுகாப்பு குறித்து ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கார் ரேஸைப் பார்ப்பவர்களே கூட “முதலில் அஜித்தை கார் ரேஸிலிருந்து விலக்க வேண்டும்” என கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அஜித், தனது உடல்நலம் மற்றும் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு மீண்டும் முழுமையாக சினிமாவிற்கே கவனம் செலுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"