BREAKING
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த நாளில் மகன் நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு புயலாக தீவிரமடையும் அக்வான் சூறாவளி ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை உலகில் 200க்கும் மேற்பட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் ; BBC, HSBC உள்ளிட்டவை பாதிப்பு தங்கம் கடத்த முயற்சி ; தலைமன்னாரில் சிக்கிய இருவர் கைது யாழில் தொடரும் மர்ம மரணங்கள் ; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த நாளில் மகன் நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு புயலாக தீவிரமடையும் அக்வான் சூறாவளி ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை உலகில் 200க்கும் மேற்பட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் ; BBC, HSBC உள்ளிட்டவை பாதிப்பு தங்கம் கடத்த முயற்சி ; தலைமன்னாரில் சிக்கிய இருவர் கைது யாழில் தொடரும் மர்ம மரணங்கள் ; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம்

மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் சேவை தற்காலிக இடைநிறுத்தம்

மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் சேவை தற்காலிக இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில், இன்று (18) நள்ளிரவு முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வருமான அனுமதிப்பத்திரம் பெறவிருக்கும் அனைத்து வாகனங்களுக்கும், தண்டப்பணம் எதுவும் வசூலிக்கப்படாமல் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக ஒன்லைன் முறையில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் சேவையும் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் இலத்திரனியல் அமைப்பில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பப் புதுப்பித்தல் காரணமாகவே குறித்த காலப்பகுதியில் இந்தச் சேவை இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"