BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ; குறையும் ஆயுட்காலம் ; மிரள வைக்கும் ஆய்வுகள்

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ; குறையும் ஆயுட்காலம் ; மிரள வைக்கும் ஆய்வுகள்

50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இரவு 8 மணிக்கெல்லாம் உறங்க சென்று விடிய காலை 3 அல்லது 4 மணிக்கு எழுந்தனர். அதனால் அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருந்தது. 80 வயதை தாண்டியும் பலரும் வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போதுள்ள ஜென்சி கிட்ஸ்கள் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள். 70, 80களில் பிறந்தவர்கள் கூட இரவு 11 மணிக்கு மேல்தான் உறங்கச் செல்கிறார்கள்.

தொலைக்காட்சி பார்ப்பது, தொலைபேசி பார்ப்பது என அவர்களின் பழக்கங்கள் மாறிவிட்டது. குறிப்பாக இரவில் பல மணி நேரங்கள் தொலைபேசி பார்த்துவிட்டு மிகவும் தாமதமாக தூங்கச் செல்லும் பழக்கம் பலருக்கும் வந்துவிட்டது.

இதன் காரணமாக அடுத்த நாள் மிகவும் சோர்வுடனையே அவர்கள் இருக்கிறார்கள். உடலும் பல வகைகளிலும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதிகாலையில் சீக்கிரம் எழும் நபர்களுடன் ஒப்பிடும்போது இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருக்கும் நபர்கள் 10 சதவீத அதிக அளவில் முன்கூட்டியே உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக Chronobiology International என்கிற மருத்துவ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மது அருந்துவது, புகைப்பிடிப்பது மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றோடு Biological clock பாதிக்கப்படுவதும் விரைவிலேயே மரணம் அடைவதற்கு முக்கிய காரணம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"