BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

மீண்டும் சமூக ஊடகங்களில் பேசுபொருளான முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா

மீண்டும் சமூக ஊடகங்களில் பேசுபொருளான முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா

  தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற பிரபல அரசியல் தலைவர் ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அனில் ரெட்டி, ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஆவார்.

சென்னையிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று( 5) நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில், முதலமைசர் விஜய் தனது தாயார் சோபா சந்திரசேகருடன் வருகை தந்தார். நடிகை த்ரிஷாவும் திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றார் .

இந் நிலையில் விஜய் மற்றும் த்ரிஷா பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

திருமண வரவேற்பு விழாவின் போது, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருடன் உரையாடி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் கௌதம் அதானி, பிஆர்எஸ் முதன்மைச் செயலாளர் கே.டி. ராமா ராவ் உள்ளிட்ட பல முன்னணி அரசியல் மற்றும் வணிகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"