BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தந்தையால் சீரழிக்கப்பட்ட வயது மகள்; அதிபர் சந்தேகத்தால் வெளிப்பட்ட தகவல்

தந்தையால் சீரழிக்கப்பட்ட வயது மகள்; அதிபர் சந்தேகத்தால் வெளிப்பட்ட தகவல்

16 வயதுச் சிறுமியை தந்தையே பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம், தலவாக்கலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர், தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி பல வாரங்களாகப் பாடசாலைக்கு வருகை தராததை அவதானித்த பாடசாலை அதிபர், மாணவியின் நிலைமை குறித்து சந்தேகமடைந்து, சம்பவம் தொடர்பாகத் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதிபரின் அவதானிப்பும் உரிய நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கையும், சிறுமி எதிர்கொண்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல் தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதற்கு வழிவகுத்துள்ளன.

இதனையடுத்து, சிறுமி, அவரது தந்தை மற்றும் தாயார் ஆகியோரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, தனது தந்தையால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரான தந்தையைக் கைது செய்த பொலிஸார், அவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தலவாக்கலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"