BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மருத்துவமனையில் இருந்து நாமலுக்கு கடிதம் அனுப்பிய மகிந்த ராஜபக்ஷ; கூறியது என்ன!

மருத்துவமனையில் இருந்து நாமலுக்கு கடிதம் அனுப்பிய மகிந்த ராஜபக்ஷ; கூறியது என்ன!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கிய விடயங்கள் அடங்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .

மகிந்த ராஜபக்ஷவின் கூற்றுப்படி, அவரது செயலாளர் ஒருவரால் வரையப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கடிதத்தின் முழுமையான உள்ளடக்கங்கள் இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

எனினும், குறித்த கடிதத்தில், நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்குமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2010ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ அரசியலில் பிரவேசித்தபோது, சிறைத் தண்டனையையும் துன்பங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் மட்டுமே அதற்கு அனுமதி வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி அக்கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாம் அரசியலில் பிரவேசித்த ஆரம்பகாலத்திலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தாமும் தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் நவலோக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தமது மகன்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் தங்களின் நலன்களை விசாரித்து வருவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரிடம் இந்தக் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"