கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'டூரிஸ்ட் பேமிலி' (Tourist Family) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக முத்திரை பதித்தவர் அபிஷன் ஜீவிந்த். முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்த அவர், தற்போது 'With Love' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக (Hero) தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு:
அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ள இப்படத்தை, பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இதில் அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டைட்டில் ரகசியம் - 'ப்ரியமுடன்' மிஸ் ஆனது ஏன்?
சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் தலைப்பு குறித்த ஒரு சுவாரசியமான தகவலைப் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர். முதலில் இப்படத்திற்குத் தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'ப்ரியமுடன்' என்ற தலைப்பை வைக்கவே படக்குழு விரும்பியுள்ளது. ஆனால், அந்தத் தலைப்பு ஏற்கனவே வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்ததால், இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதன் பின்னரே படத்திற்கு 'With Love' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் பட தலைப்புகளின் மவுசு:
சமீபகாலமாக விஜய்யின் பழைய படத் தலைப்புகளான 'லவ் டுடே', 'ஒன்ஸ் மோர்', 'யூத்' போன்றவை புதிய படங்களுக்கு வைக்கப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்று வருகின்றன. அதே பாணியில் 'ப்ரியமுடன்' தலைப்பை இவர்கள் குறிவைத்தாலும், காலதாமதம் காரணமாக அது கைநழுவிப் போயுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக