BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இறக்குமதி செய்வதாக கூறி . பில்லியன் ரூபாய் மோசடி ; கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

இறக்குமதி செய்வதாக கூறி . பில்லியன் ரூபாய் மோசடி ; கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

இறக்குமதி செய்வதாக கூறி பல பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வங்கிகணக்குகளுக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாக வெல்லம்பிட்டியவில் நேற்று கைதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (8) உத்தரவிட்டுள்ளது.

பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி நிறுவனங்கள் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலரை ( 7.5 பில்லியன் ரூபாவை) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்த சந்தேகநபரை நிதி மோசடி விசாரணை பிரிவு (FCID) நேற்று கைது செய்தது.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான சந்தேகநபர், வர்த்தக வங்கிகள் ஊடாக 'TT' (Telegraphic Transfers) முறைமையைப் பயன்படுத்தி இப் பெருந்தொகையை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் 6 நிறுவனங்களின் பெயர்களில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பொருட்களை முன்பதிவு செய்வதாகக் காண்பித்துச் சந்தேகநபர் இந்த நிதி மோசடியைச் செய்துள்ளார்.

2024 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையிலான காலப்பகுதியில் இந்நிதி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், குறித்த பரிவர்த்தனைகளுக்குரிய எந்தப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"