BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!!

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!!


ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (07) காலை அவர் கைது செய்யப்பட்டார்.

கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ, சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முன்னாள் முதல் பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளமை  இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, இன்று (07) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

அரச வங்கி ஒன்றில் 100 இலட்சம் ரூபாய் நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (07) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அந்த ஆணைக்குழுவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை இலங்கை வரலாற்றில் முன்னாள் முதல் பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை ஆகும்.

இன்று காலை  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ அவரது வீட்டில் வைத்து கைதான நிலையில், முன்னாள்  ஜனாதிபதி மஹிந்தவும்  அவருடன்  சென்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"