BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த துயரம்

இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த துயரம்

அருகம்பை - சின்ன உள்ளை பகுதியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு  நேற்று (28) மாலை காட்டு யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்ட அவர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இதன் பின்னணியில் அப்பகுதியில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தலங்களான அருகம்பை மற்றும் சின்ன உள்ளை பகுதிகளில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நடமாடுகின்றனர்.

இந்நிலையில், குடியிருப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குள் காட்டு யானைகள் வருகை அதிகரித்துள்ளதால், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வனஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸாரும் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"