BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானம் இல்லை ; நளிந்த ஜயதிஸ்ஸ

திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானம் இல்லை ; நளிந்த ஜயதிஸ்ஸ

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு உறுதியான தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், சில கணிப்புகள் வெற்றியளித்துள்ள போதிலும், மேலும் சில கணிப்புகளுக்கான இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உலகின் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டு தேவையான தருணத்தில் தீர்மானம் எடுக்க முடியும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை விலகவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகி மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் அங்கு கூறியிருந்தார்.

எனினும், இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இது தொடர்பில் வினவப்பட்ட போது, அதற்கான நிலையான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறினார். அவ்வாறு நிலையான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

சில கணிப்புகளை நாம் வெற்றியடையச் செய்துள்ளோம். ஆனால் சில கணிப்புகளுக்கான இலக்குகளை நாம் இன்னும் அடையவில்லை, அவை இடைப்பட்ட நிலையிலேயே உள்ளன.

இன்னும் சில மாதங்கள் உள்ளன, அடுத்த ஆண்டிலும் சில மாதங்கள் உள்ளன. உலகின் நிலைமை, பொருளாதாரத்தின் நிலைமை ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டே அந்தத் தருணத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"