BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றல்; யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றல்; யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மாணவர் ஒன்றியம் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

நேற்று காலை 6.30 அளவில், திலீபனின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை காவல்துறையினர் அத்துமீறி அகற்றி எடுத்துச் சென்றுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உள்ளிட்ட கூட்டுரிமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நேரடி தாக்குதலாகவே இந்த நடவடிக்கையை தாம் கருதுவதாகவும் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நினைவேந்தல் உரிமையை தொடர்ந்து மறுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் அகற்றப்பட்ட திலீபனின் சிலை, மீண்டும் அதே இடத்தில் முறையாக நிறுவப்படும் வரை, தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் போராட்டங்கள் தொடரும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை தொடர்பில் அதிகாரிகள் நியாயமான முறையில் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"