அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் டிசி. இப்படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் பொறி பறக்கும், அதே வேளையில் அனிருத் இசையில் படம் முழுவதும் பட்டாசாக இருக்கும்.
அதன் காரணமாகவே இளைஞர்கள், முக்கியமாக ஜென் சி கூட்டம் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாட, உலகம் முழுவதும் இப்படம் ரூ. 100 கோடி வசூலை கடந்தது.
அதில் குறிப்பாக கேரளா மற்றும் தெலுங்கில் இந்த படம் ரூ. 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்தகைய பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த அருண் மாதேஸ்வரன், அனிருத், லோகேஷ் கனகராஜுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட BMW கார்களை பரிசாக வழங்கியுள்ளது.
கண்டிப்பாக இதனால் இதே டீம் வேறு ஒரு படத்திலும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக