BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

மதவாச்சியில் துப்பாக்கிச் சூடு விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மதவாச்சியில் துப்பாக்கிச் சூடு விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் மாவட்டம் மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (21.01.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த நிலையில், குறித்த விவசாயி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் படி,

உயிரிழந்த விவசாயி கரம்பன்குளம் வனப்பகுதிக்கு அருகில் மருதாணி பயிரிட்டு வந்தவர் எனவும்,

விவசாய நோக்கங்களுக்காக வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் இலக்காகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"