BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

வருடங்களாக டாக்டர் வேடம்: பேஸ்புக் புகைப்படங்களை காட்டி ஏமாற்றிய போலி மருத்துவர் சிக்கினார்! - வாழைச்சேனையில் அதிரடி.

வருடங்களாக டாக்டர் வேடம்: பேஸ்புக் புகைப்படங்களை காட்டி ஏமாற்றிய போலி மருத்துவர் சிக்கினார்! - வாழைச்சேனையில் அதிரடி.

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பகுதியில், எவ்வித மருத்துவத் தகுதியும் இன்றி சட்டவிரோதமாக கிளினிக் நடத்தி வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 3 வருடங்களாக தன்னை ஒரு மருத்துவர் என அடையாளப்படுத்திக் கொண்டு, அவர் பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்தமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சமூக வலைதள மோசடி: இவர் மருத்துவர் போன்ற உடையணிந்து கிளினிக்கில் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

அதிரடிச் சோதனை: மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த மருத்துவ நிலையம் முற்றுகையிடப்பட்டது.

ஆதாரங்கள் இன்மை: சோதனையின் போது அவரிடம் மருத்துவ அடையாள அட்டை அல்லது நிலையத்தைப் பராமரிப்பதற்கான எவ்வித சட்டபூர்வ ஆவணங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்டவை: அந்த நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பொலிஸார் சான்றுப் பொருட்களாக மீட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"