BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கை சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல்; ஒக்டோபர் முதல் புதிய நடைமுறை

இலங்கை சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல்; ஒக்டோபர் முதல் புதிய நடைமுறை

இலங்கை சுங்க சேவையில் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறை (Paperless Customs Declaration Processing System) எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். புதிய நடைமுறை மூலம் சுங்க சீராக்கல் செயல்முறையை வேகமாகவும், திறமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LankaSign டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA அமைப்பு ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் சுங்க ஆவணங்களை சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இணையவழியில் சமர்ப்பிக்க முடியும்.

மேலும், டிஜிட்டல் கையொப்பமிட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை கணினி அமைப்பு கண்டறியக்கூடியதால் மோசடி மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டிஜிட்டல் நடைமுறையால் சுங்க சீராக்கல் முகவர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாது என்றும், தொழிலின் தன்மை மாத்திரம் மாற்றமடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"