BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் வீட்டிற்குள் புகுந்து முதியவர் மீது தாக்குதல்: கத்தியைக் காட்டிப் பணம் பறிக்க மர்மநபர் முயற்சி!

வவுனியாவில் வீட்டிற்குள் புகுந்து முதியவர் மீது தாக்குதல்: கத்தியைக் காட்டிப் பணம் பறிக்க மர்மநபர் முயற்சி!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (27.07.2026) காலை வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த முதியவரைத் தாக்கிப் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று காலை முதியவரின் மனைவி வெளியூர் சென்றுள்ள நிலையில், இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய நபர் துவிச்சக்கர வண்டியில் வருகை தந்து கத்தியைக் காட்டி முதியவரை மிரட்டியுள்ளார்.

வீட்டிற்குள் புகுந்த அந்த மர்மநபர், முதியவரை அச்சுறுத்தி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைத் தருமாறு கோரியுள்ளார். அதற்கு முதியவர் மறுப்புத் தெரிவித்து பணத்தைக் கொடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த அவர் முதியவர் மீது கொடூரத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தப்பிச் சென்ற மர்மநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"