BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தேவாலயத்திற்கு அருகில் வீடு மீது துப்பாக்கிச்சூடு; தப்பிச் சென்ற கார் வாய்க்காலில் சிக்கியது சாரதி தப்பியோட்டம்

தேவாலயத்திற்கு அருகில் வீடு மீது துப்பாக்கிச்சூடு; தப்பிச் சென்ற கார் வாய்க்காலில் சிக்கியது சாரதி தப்பியோட்டம்

மாத்தறை, தெவிநுவர பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் திக்வெல்ல பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

தெவிநுவர, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி பகுதியில் அமைந்துள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீது, நேற்று அதிகாலை காரில் வந்த குழுவொன்று பிஸ்டல் ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான முக்கியமான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு புதிய பெலியத்த வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட முயன்றபோது, அதன் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியை விட்டு விலகி வாய்க்கால் ஒன்றுக்குள் விழுந்துள்ளது. பின்னர், காரில் இருந்த சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைச் சோதனையிட்ட பொலிஸார், அது தெவிநுவர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், சிசிரிவி காட்சிகள் மற்றும் மீட்கப்பட்ட வாகனம் ஆகியவற்றின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"