BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வெளியீட்டுக்கு முன்பே வசூல் வேட்டையை தொடங்கிய ஜனநாயகன்; வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கிற்கு அமோக வரவேற்பு

வெளியீட்டுக்கு முன்பே வசூல் வேட்டையை தொடங்கிய ஜனநாயகன்; வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கிற்கு அமோக வரவேற்பு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஜூலை 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார்.

பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் வெளியீடு தாமதமானது. சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு தேவையான தணிக்கைச் சான்றிதழைப் பெற்று தற்போது திரையரங்க வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பின் காரணமாக, ப்ரீ புக்கிங் தொடங்கிய குறுகிய காலத்திலேயே திரைப்படம் சுமார் ரூ.1.25 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியீட்டுக்கு முன்பே குறிப்பிடத்தக்க முன்பதிவு வசூலைப் பதிவு செய்துள்ள ‘ஜனநாயகன்’, உலகளாவிய வெளியீட்டின் பின்னர் மேலும் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலக வட்டாரங்களில் நிலவி வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"