BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

'காதல் சொல்ல வந்தேன்' நடிகர் யுதன் பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்

'காதல் சொல்ல வந்தேன்' நடிகர் யுதன் பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்

பிரபல தொலைக்காட்சி தொடரான கனா காணும் காலங்கள் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான நடிகர் யுதன் பாலாஜி, தற்போது ஆஸ்திரேலியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுதன் பாலாஜி, 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கினார். பின்னர், 2009 ஆம் ஆண்டு வெளியான பட்டாளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படத்தில் நடிகை மேக்னா ராஜ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன்பின்னர் மெய்யழகி, நகர்வலம் உள்ளிட்ட திரைப்படங்களிலும், டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் வெள்ள ராஜா போன்ற தொலைக்காட்சி மற்றும் இணையத் தொடர்களிலும் யுதன் பாலாஜி நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான ஒரு நேர்காணலில் நடிகை மேக்னா ராஜ் பேசியபோது, யுதன் பாலாஜியை தொடர்புகொண்டு பேசியதாக தெரிவித்தார். அப்போது, யுதன் பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும், அந்நாட்டு அரசின் சைபர் குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் ஹேக்கராக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"