BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

தலைநகரில் களைகட்டும் "நம்மவர் பொங்கல் ": தெகிவளையில் நாளை பிரம்மாண்ட கொண்டாட்டம்!

தலைநகரில் களைகட்டும் "நம்மவர் பொங்கல் ": தெகிவளையில் நாளை பிரம்மாண்ட கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு, கொழும்பில் வாழும் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் “தலைநகரில் நம்மவர் பொங்கல் – 2026” எனும் பாரம்பரியப் பெருவிழா நாளை (ஜனவரி 15) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹா விஷ்ணு கோவில் வளாகத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு லங்காசிறி நிறுவனம் மக்கள் அனைவருக்கும் அன்பான அழைப்பை விடுத்துள்ளது.

பாரம்பரிய பொங்கல் திருவிழா: திறந்த வெளியில் பானை வைத்து பொங்கல் இடுதல்.

கலை நிகழ்ச்சிகள்: பாரம்பரிய இசை மற்றும் கலை வடிவங்களின் சங்கமம்.

கலாசார நிகழ்வுகள்: தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்வுகள்.

அனுசரணையாளர்கள்:
இந்த மாபெரும் விழாவிற்கு IDM Campus, FADNA, மற்றும் Little Lion ஆகிய நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றன.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இந்த இனிய பொங்கல் விழாவைச் சிறப்பிக்க வருமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"