BREAKING
“நூறு சாமி” திரைப்படம் 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு? வெளியான தகவல் 2026 உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை: கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் விநியோகம் ஆரம்பம்: 39 மையங்களில் சேவை யாழ். செம்மணி மனித புதைகுழி: 400-ஐ கடந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன காரசாரமான சுவையில் தெலங்கானா ஸ்டைல் சிக்கன் மசாலா: வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி? “நூறு சாமி” திரைப்படம் 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு? வெளியான தகவல் 2026 உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை: கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் விநியோகம் ஆரம்பம்: 39 மையங்களில் சேவை யாழ். செம்மணி மனித புதைகுழி: 400-ஐ கடந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன காரசாரமான சுவையில் தெலங்கானா ஸ்டைல் சிக்கன் மசாலா: வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் விநியோகம் ஆரம்பம்: மையங்களில் சேவை

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் விநியோகம் ஆரம்பம்: மையங்களில் சேவை

சென்னையில் மூத்த குடிமக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்கான பயண டோக்கன்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் மொத்தம் 60 இலவச பயண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளதாக மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. டோக்கன் விநியோக நடவடிக்கைகள் ஜூன் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை சென்னை மாநகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 39 விநியோக மையங்களில் தினமும் காலை 8.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 20 வரை சம்பந்தப்பட்ட போக்குவரத்து பணிமனை அலுவலகங்களில் அலுவலக நாட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் டோக்கன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டை, வயது உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் இரண்டு வண்ணப் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். வயது சான்றாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கல்விச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை புதுப்பிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"