BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பெருமளவு பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜை ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. முறைப்பாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக நம்பிக்கை அளித்து, ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கிளிநொச்சி பிரிவு விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர். மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடையவர் என்றும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில் கிளிநொச்சி பிரிவு விசேட குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"