BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மருந்து விலைகளில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு சில மருந்துகளுக்கு விலை உயர்வு குறித்து தேசிய மருந்துகள் அதிகாரசபை அறிவிப்பு

மருந்து விலைகளில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு சில மருந்துகளுக்கு விலை உயர்வு குறித்து தேசிய மருந்துகள் அதிகாரசபை அறிவிப்பு

இலங்கையில் சில மருந்துகளின் விலைகளை உயர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்ததாவது, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சில மருந்துகளின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அரசாங்க வர்த்தமானி மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள சுமார் 60 வகை மருந்துகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லா மருந்துகளுக்கும் விலை உயர்வு ஏற்படாது என்றும், குறிப்பிட்ட சில மருந்துகளின் விலைகளில் மட்டுமே மாற்றம் இருக்கலாம் என்றும் அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலைமை மருத்துவ செலவுகள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கவனிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"