BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு கொடூர தாக்குதல்: சிறுவர்கள் கைது வைரலான காணொளியால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு கொடூர தாக்குதல்: சிறுவர்கள் கைது வைரலான காணொளியால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்

வவுனியா மாவட்டத்தின் இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இரண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் “வவுனியா சிங்கித்தி பாதாளய” என்ற பெயரில் காணொளி பரவியதைத் தொடர்ந்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 மாணவர்களை இரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த சிறுவர்களை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை கெபிதிகொல்லேவ சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம், சிறுவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சமூக ஊடக தாக்கம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"