BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

படகில் இருந்து கடலில் விழுந்த அதிபர் உயிரிழப்பு ; நயினாதீவில் சோக சம்பவம்

படகில் இருந்து கடலில் விழுந்த அதிபர் உயிரிழப்பு ; நயினாதீவில் சோக சம்பவம்

யாழ்ப்பாணம் நயினாதீவு – குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில், பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். நயினாதீவை பூர்வீகமாகக் கொண்ட நடராசா மயூரன் என்ற அதிபரே இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல்களின் படி, அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும் வழக்கமான பயணிகள் படகை தவறவிட்டதையடுத்து, கடற்தொழிலாளி ஒருவரின் சிறிய படகில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர். கடற்காற்று காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடல் அலைகளால் பலமாக அசைந்ததால் அதிபர் நிலைதடுமாறி கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக படகோட்டி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நடராசா மயூரன், புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் முன்னாள் அதிபராகவும், தற்போது நயினாதீவு கணேச மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் பணியாற்றி வந்துள்ளார். கல்வி மற்றும் சமூக சேவைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பால், அவரது இழப்பு நயினாதீவு மற்றும் புங்குடுதீவு மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"