BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மருந்தகத்தில் , போதை மாத்திரைகள்: நீர்கொழும்பில் ஜீப் வண்டியுடன் சிக்கிய நபர்!

மருந்தகத்தில் , போதை மாத்திரைகள்: நீர்கொழும்பில் ஜீப் வண்டியுடன் சிக்கிய நபர்!

நீர்கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் நேற்று (ஜனவரி 9) அதிகாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜீப் வண்டி சோதனை: பெரியமுல்ல, ஏத்துக்கால ரயில் கடவைக்கு அருகில் பயணித்த சந்தேகத்திற்கிடமான ஜீப் வண்டியை மறித்துச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 10 கிராம் கஞ்சா, 1 கிராம் கொக்கைன் மற்றும் 100 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

மருந்தகத்தில் சோதனை: கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான மருந்தகத்தைச் சோதனையிட்ட பொலிஸார் அங்கிருந்து மேலதிகமாக 1,000 போதை மாத்திரைகளைக் கைப்பற்றினர்.

விடுதி அறையில் 'குஷ்': சந்தேகநபர் தங்கியிருந்த விடுதி அறையைச் சோதனையிட்ட போது 29 கிராம் 'குஷ்' போதைப்பொருள் மற்றும் அடையாளம் காணப்படாத சில போதைப்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை: குறித்த நபர் நீண்டகாலமாக மருந்தகத்தை மறைவிடமாகப் பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தாரா என்பது குறித்து நீர்கொழும்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"