BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு மாநகர சபை: கூட்டு எதிர்க்கட்சியில் பிளவு!

கொழும்பு மாநகர சபை: கூட்டு எதிர்க்கட்சியில் பிளவு!

கொழும்பு மாநகர சபையின் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த மூன்று முக்கிய உறுப்பினர்கள், எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அதிரடியாக விலகி சுயேச்சையாகச் செயற்படத் தீர்மானித்துள்ளதாக மாநகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இந்திக சஞ்சீவ மற்றும் சுனந்த பத்திரண ஆகியோருடன், சுயேச்சைக் குழு 01-ன் தலைவரான ஹுசைன் மன்சில் ஆகிய மூவருமே இவ்வாறு கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளனர். மாநகர சபை வரவு செலவுத்திட்ட விவகாரத்தில் நிலவிய பல்வேறு சூழ்ச்சிகள் மற்றும் உட்கட்சி மோதல்கள் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த உறுப்பினர்களின் விலகலானது கூட்டு எதிர்க்கட்சிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படும் அதேவேளை, இனிவரும் காலங்களில் இவர்கள் எவ்விதக் கட்சிச் சார்புமின்றி சுயேச்சையாகவே சபையில் இயங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாநகர சபை நிர்வாகச் செயல்பாடுகளில் கடும் சவால்களைச் சந்தித்து வந்த தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு, இந்த உறுப்பினர்கள் மறைமுகமாக ஆதரவு வழங்குவார்களா அல்லது தனித்துவமான நிலைப்பாட்டை எடுப்பார்களா என்பது அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"