BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மரக்கறிகளின் விலை கடும் உயர்வு!

மரக்கறிகளின் விலை கடும் உயர்வு!

இலங்கையில் டீசல் விலை அதிகரிப்பு மற்றும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மிக வேகமாக உயர்ந்து வருவதாகப் பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தம்புள்ளை உள்ளிட்ட பிரதான பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 500 ரூபாவிற்கும், தக்காளி 400 ரூபாவிற்கும், பாகற்காய் 420 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சில்லறை சந்தைகளில் போஞ்சி ஒரு கிலோ 650 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், மலையகப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரக்கறிச் செய்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அறுவடை குறைவடைந்து சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால், வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"