BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எம்.பி பிரசாத் சிறிவர்தனவுக்கு முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடி அதிரடி நோட்டீஸ்!

எம்.பி பிரசாத் சிறிவர்தனவுக்கு முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடி அதிரடி நோட்டீஸ்!
தன் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவுக்கு எதிராக முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டத்தரணி மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், குமார ஜெயக்கொடி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக பிரசாத் சிறிவர்தன சுமத்திய குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

30 ஆண்டுகால அனுபவம் கொண்ட தகுதியான பொறியியலாளரான குமார ஜெயக்கொடி, கறைபடாத நற்பெயரைக் கொண்டவர் என்றும், நிலக்கரி இறக்குமதி சர்ச்சையின் போது விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் அவராகவே முன்வந்து பதவி விலகியவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திட்டமிட்டுத் தனது கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் இப்பணத்தைச் செலுத்தத் தவறினால், நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது சட்டத்தரணி சம்பத் யாலேவத்த எச்சரித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"