BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அம்பாறையில் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் கைது கடல், தரை வழி கடத்தல் வலையமைப்பு வெளிச்சத்துக்கு

அம்பாறையில் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் கைது கடல், தரை வழி கடத்தல் வலையமைப்பு வெளிச்சத்துக்கு

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக இரகசியமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, புறநகர் பகுதியில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது சுமார் 70 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மோட்டார் சைக்கிள், 80,000 ரூபா பணம், இலத்திரனியல் தராசு மற்றும் பல நவீன கைபேசிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 40 மற்றும் 31 வயதுடைய இளைஞர்கள் எனவும், அவர்கள் சிகை அலங்கார தொழிலில் ஈடுபட்டவர்கள் எனவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து கடல் மற்றும் தரை வழியாக போதைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்த ஒரு பெரிய வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த வலையமைப்பின் முழு பின்னணியை கண்டறிய மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"