BREAKING
சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம் ; சானக மதுகொட குற்றச்சாட்டு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! நாமலைத் தொடர்ந்து யோஷித மற்றும் ரோஹித தீவிர விசாரணை வலையில்! கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு உலகின் மிகக் குறுகலான வீடு - வெறும் 72 செ.மீ இடத்தில் இவ்வளவு வசதிகளா! சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம் ; சானக மதுகொட குற்றச்சாட்டு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! நாமலைத் தொடர்ந்து யோஷித மற்றும் ரோஹித தீவிர விசாரணை வலையில்! கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு உலகின் மிகக் குறுகலான வீடு - வெறும் 72 செ.மீ இடத்தில் இவ்வளவு வசதிகளா!

நேரடி சூரிய ஒளியால் புற்றுநோய் அபாயம்: காலை முதல் மாலை மணி வரை எச்சரிக்கையாக இருக்க நிபுணர் அறிவுறுத்தல்!

நேரடி சூரிய ஒளியால் புற்றுநோய் அபாயம்: காலை முதல் மாலை மணி வரை எச்சரிக்கையாக இருக்க நிபுணர் அறிவுறுத்தல்!

நேரடி சூரிய ஒளியின் தாக்கம் காரணமாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக புற்றுநோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஹசந்தி லாலா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக முற்பகல் 10 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய கதிர்கள் நேரடியாக உடலில் படுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நேரத்தில் வெளியே செல்பவர்கள் சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ள உரிய ஆடைகளை அணிவது அவசியமாகும். மெலனோமா மற்றும் மெலனோமா அற்ற என இரண்டு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதாகவும், இதில் மெலனோமா அற்ற புற்றுநோய் சூரிய ஒளியால் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் விளக்கினார். எனினும், இந்த வகைப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும். அதேவேளை, உடலுக்குத் தேவையான வைட்டமின் டி-யைப் பெற்றுக்கொள்ள சூரிய ஒளி அவசியம் என்பதால், மிதமான வெயில் உடலில் படுவது ஆரோக்கியமானது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அளவுக்கு மிஞ்சிய கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், உச்சகட்ட வெயில் நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"