BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அஸ்வெசுமா நிதியில் பெரும் குழப்பம்? திறைசேரியில் மேலும் மில்லியன் ரூபா கொடுப்பனவு விவகாரம் தீவிரம்!

அஸ்வெசுமா நிதியில் பெரும் குழப்பம்? திறைசேரியில் மேலும் மில்லியன் ரூபா கொடுப்பனவு விவகாரம் தீவிரம்!

அஸ்வெசுமா (Aswesuma) நலத்திட்ட பயனாளிகளுக்கு மேலதிகமாக நிதி செலுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘Free Lawyers’ அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இருமுறை அல்லது கூடுதலாக வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறான கொடுப்பனவுகளின் மொத்த மதிப்பு சுமார் 500 மில்லியன் ரூபாவிற்கு அருகிலுள்ளதாக கூறப்படுவதுடன், இது அரசின் நிதி முகாமைத்துவத்தில் மிகப்பெரிய அலட்சியத்தையும் குழப்பத்தையும் வெளிக்காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சமீபத்தில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனதாக வெளியான சர்ச்சையுடன் இதையும் ஒப்பிட்டு பல தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து உடனடி நாடாளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் என ‘Free Lawyers’ அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசியலமைப்பின் 148வது பிரிவின் கீழ் அரச நிதி மேலாண்மைக்கு பொறுப்பான நாடாளுமன்றம் இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த சம்பவம் மேலும் பாதிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"