BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

19-வது ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அதன் சொந்த மைதானமான அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி, சென்னை பந்துவீச்சுக்கு எதிராக தொடக்கம் முதலே தடுமாறியது. பதும் நிசங்கா 19 ரன்கள், கே.எல். ராகுல் 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தாலும், சமீர் ரிஸ்வி 40 ரன்கள் எடுத்து அணிக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

சென்னை தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தி முக்கிய பங்காற்றினார். அகீல் ஹொசைன், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்நீத் சிங் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட் பெற்றனர்.

156 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உர்வில் பட்டெல் விரைவில் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன்பின் சஞ்சு சாம்சன் மற்றும் கார்த்திக் ஷர்மா ஜோடி போட்டியை முழுமையாக மாற்றியது.

சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தில் 52 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாக திகழ்ந்தார். கார்த்திக் ஷர்மா 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"