BREAKING
கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

ஹீமோகுளோபின் குறைவா? உடனே கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் இயற்கை தீர்வுகள் இதோ!

ஹீமோகுளோபின் குறைவா? உடனே கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் இயற்கை தீர்வுகள் இதோ!

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது இன்று பலருக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. அடிக்கடி சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல், தலைசுற்றல் மற்றும் சருமம் வெளிறுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், அது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக ஆண்களுக்கு 13.8 முதல் 17.2 g/dL, பெண்களுக்கு 12.1 முதல் 15.1 g/dL, குழந்தைகளுக்கு 11 முதல் 16 g/dL வரை ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த அளவுக்கு கீழ் குறையும் போது அனீமியா போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, உடல் சோர்வு மட்டுமல்லாமல், தினசரி செயல்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படலாம்.

இதனை சரிசெய்ய இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது முக்கியம். குறிப்பாக பீட்ரூட், கேரட் ஜூஸ், மாதுளை, கற்றாழை மற்றும் லெமன் கிராஸ் போன்ற இயற்கை உணவுகள் ரத்தத்தை தூண்டும் தன்மை கொண்டவை என கூறப்படுகிறது. அதேபோல் அத்திப்பழம் மற்றும் பேரீட்சை பழங்களில் உள்ள அதிக இரும்புச் சத்து ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவுகிறது.

ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் ரத்த சோகை பிரச்சனையை கட்டுப்படுத்தி, உடல் சக்தியை மேம்படுத்த முடியும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"